காரைக்குடி: அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த பட்ட மளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்காமல், தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு செய்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா இன்று காலை ஏற்கனவே அறிவித்தபடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்துகொள்ள வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்ற மொத்தம் 40, 414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர் தரவரிசையில் இடம் பெற்ற 184 பேர் என 348 பேருக்கு நேரடியாக படங்கள் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் வீ. காமகோடி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இறுதியில் எந்தவொரு அறிவிப்பும் செய்யாமல், அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை புறக்கணித்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இருவரும் பேசி சுமூக தீர்வு காண வலியுறுத்தியது. அதன்படி ஒருமுறை இருவரும் பேசிய நிலையில், மீண்டும் சலசலப்பு தொடர்ந்து வருகீறது. இந்த நிலையில், நேதாஜி பிறந்தநாள்ன டிசம்பர் 23ந்தேதி நடைபெற்ற விழாவில், கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று கூறியிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நாளை (30-ம் தேதி) காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து வன்மை கலந்த நோக்கத்துடன் இருக்கிறது என கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.