அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை பிப். 24 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 100 சதவீத டிக்கெட் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வலிமை பட ரிலீசுக்காக உற்சாகமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கி இருக்கும் இந்தப் படம், தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

இந்தப் படத்தின் ஆக்சன் காட்சிகள் நிறைந்த புதிய ட்ரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.