
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தல அஜீத்தை நடிகர் என்பதை தாண்டி பொதுவாகவே ஒரு நல்ல மனிதர் என்பதால் பலருக்கும் பிடிக்கும். அவரது சிம்பிளான வாழ்க்கை முறையும், அலட்டிக்கொள்ளாமல் ரசிகர்களுடன் உரையாடுவதும் பலருக்கு பிடித்தமான உள்ளது .
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் தல அஜித் போலவே இருக்கும் ஒருவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். வீடியோக்களில் பார்க்கும் பொழுது அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் அவரது பெயர் சுதாகர். தல டயலாக்குகளை எடுத்து அதற்கு பக்காவாக வாய் அசைக்கிறார். அவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிகில் பட பிரபலம் இந்திரஜா ரோபோ ஷங்கர் கூட லைக் செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]