அஜித்தின் “விவேகம்” பட டீசர் வெளியீடு!

Must read

ஜித்தின் விவேகம் பட டீசர் நேற்று இரவு வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் விவேகம்.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக  காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானது.

ஏற்கனவே அஜித்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அஜித் விவேகம் படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியான 8 மணி நேரத்தில் 16.6லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc]

More articles

Latest article