சென்னை
இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவர் மனைவி ஷாலினி வரிசையில் நின்று வாக்களித்தனர்

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக தொடங்கி உள்ளது. மக்களில் பலர் காலை வேளையிலேயே வாக்களிக்கத் துவங்கி விட்டனர்.
வாக்களிப்பது நமது கடமை என மக்களிடையே பரப்புரை நடத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் ஒரு உதாரண குடிமகனாக தல என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தங்கள் வாக்குச்சாவடிக்கு காலை 6.40 மணிக்குச் சென்று மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel