அஜித் கட்அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்: திருக்கோவிலூரில் பரபரப்பபு (வீடியோ)

திருக்கோவிலூர்:

டிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது.

பெரும் வரவேற்பு பெற்றுள்ள விஸ்வாசம் படம் வெளியான  திருக்கோவிலூர் தியேட்டர் ஒன்றில், அஜித் கட்அவுட் சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித் நயன்தாரா ஜோடி நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாகி உள்ளது. அதுபோல ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களுக்கும் இடையே யார் மாஸ் என்று போட்டி நிலவி வருகிறது.

விஸ்வாசம் படம் பேனர்கள், போஸ்டர்கள் என அஜித் ரசிகர்கள் கலக்கி வருகின் றன. இந்த நிலையில் விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் அஜித் விஸ்வாசம் படத்திற்காக பிரமாண்டமான அஜித் கட்அவுட் வைக்கப்பட்டி ருந்தது.

அந்த கட்அவுட்  மீது ஏறி, அஜித் ரசிகர்கள் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்தும் பால் ஊற்றியும் அபிசேகம் செய்தனர். அப்போது பாரம் தாங்காமல் அஜித் கட்அவுட் சாய்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்அவுட் மீது ஏறியவர்கள் உள்பட தியேட்டர் வளாகத்தில் நின்று கொண்டிருந்தவர்களும் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடடினயாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் கட்அவுட் சரியும் வீடியோ…

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 5 injured, 6 பேர் படுகாயம்!!, Ajith cut out, Ajith cut out collapses, Thirukovilur theatre, viswasam cutout collapses, அஜித் கட்அவுட், அஜித்கட்அவுட் சரிவு, திருக்கோவிலூர் தியேட்டர், விஸ்வாசம்
-=-