குற்றாலம்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
தற்போது சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்வதால் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. அனைவரும் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இங்கு வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதிக் கூடுதல் காவல்துறையினர் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.