டில்லி,

ரிலையன்ஸ் வழங்க இருக்கும் இலவச ஜியோ 4ஜி போனுக்கு போட்டியாக ஏர்டெல்லும் களத்திலும் குளித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது ஏர்டெல்லின் 4ஜி போன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரிலையன்சின் போனை விட அதிக வசதிகளுடன் இரண்டு சிம் உபயோகப்படுத்தும் 4 இஞ்ச் டிஸ்பிளே, முன்னால் மற்றும் பின் காமிரா, 1 ஜிபி ராம்  மற்றும் வோல்ட் வசதியுடன்   4ஜி ஸ்மார்ட்போன் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ​​ஏர்டெல்  4ஜி ஸ்மார்ட்போனாக ரூ.2000/- க்கு வழங்கப்படும் என்றும்,  வரும் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.