சென்னை:
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியது.

இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏர்டெலை காட்டிலும் ஜியோ நிறுவனம் புயல் வேகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று புதிதாக 125 நகரங்களுக்கு 5ஜி சேவையை அந்நிறுவனம் விரிவாக்கம் செய்தது. இதன்மூலம் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு விடும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.