மதுரை,
மதுரை விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியானது. இலங்கையை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலைய பாதுகாப்பு வேலியை நீக்கி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மதுரை வந்தடைந்தது இலங்கையை சேர்ந்த சர்வதேச விமானம். அதில் இருந்த விமான சிப்பந்திகள் மதுரை மக்களின் எதிர்ப்பு காரணமாக பிரதான வாசல் வழியாக வெளியேறாமல், விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்புகாகக் போடப்பட்டிருக்கும் கம்பி வளையை நீக்கி அதன் வழியாக வெளியேறினர்.
இது இந்தியாவில் விமான நிலைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீலங்காவை சேர்ந்த விமான சிப்பந்திகள், விமான நிலையம் வாசல் வழியாக செல்ல முடியாத தால், கொழும்பு டெலிகிராப் விமான நிறுவனங்களின் கேப்டன். ஆர் டி அல்விஸ் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, விமான நிலைய சோதனை மற்றும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகள் முடிந்த வுடன் தடை செய்யப்பட்ட வழியாக நுழைந்து சென்றனர்.
இதுகுறித்த வீடியோ யுடியூப் வலைதளத்தில் பரவி வருகிறது.
அதில், விமான நிலையத்தை ஒட்டிய ஒரு கரடுமுரடான பாதை வழியாக அவர்கள் நடந்து சென்று முட்கம்பிகளால் வேயப்பட்ட வேலியினுடே வாத்து போலை நுழைந்து செல்வது தெரிகிறது.
இது விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய விமான துறையின் அஜாக்கிரதையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய பதான்கோட் மற்றும் இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலுக்கு பிறகு, இந்தியா முழுவதும் உள்ள 98 விமான நிலையங்கள் குறித்து விமானத்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தது.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு, முதலில் 59 விமான நிலை யங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டை சேர்ந்த விமான ஊழியர்கள், விமான நிலைய பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள கம்பி வேலி வழியாக நுழைந்து செல்வது இந்திய விமான நிலைய பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது, பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் மெத்தனத்தையே காட்டுவதாக தெரிகிறது.
ஏற்கனவே பதான்கோட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.