டில்லி:
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை ஜூலை 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரித்த வந்த நிலையில், அமலாக்கத்துறையும் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து, டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறை கைது செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.