டில்லி
இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடன் தொல்லை காரணமாக தன்னிடம் இருக்கு பங்குகளில் 76 % பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசு இந்த நிறுவனத்துக்கு அரசு நிதி உதவிகள் அளித்து நஷ்டத்தை ஈடு கட்ட முயர்சி செய்தது. ஆனால் ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு ரூ.52,132 கோடி கடன் உள்ளதால் நஷ்டத்தில் இருந்து மீட்க இந்த நிதி உதவி போதுமானதாக இல்லை.
அதை ஒட்டி ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடம் உள்ள சொத்துக்களை விற்று கடனை அடைக்க திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியாவிடம் நிலங்கள், இரு ஓட்டல்கள், பல வழித்தடங்கள் என பல வகை சொத்துக்கள் உள்ளன. இவற்றில் 76 % பங்குகளை விற்பனை செய்ய விலைப்புள்ளி கேட்டு ஏர் இந்தியா நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
இந்த விளம்பரத்துக்கான விலைப் புள்ளிகள் அளிக்க கடைசி தேதி வரும் மே மாதம் 14ஆம் தேதி ஆகும். இந்த வழித் பங்குகளை வாங்க இண்டிகோ, டாடா, மற்றும் துருக்கி விமானக் கூட்டணி நிறுவனங்கள் ஆகியவை தயாரக உள்ளதக தெரிய வந்துளது. அத்துடன் இந்த பங்குகளை வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.