டில்லி

ஞ்ச வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

தற்போது நீதிமன்றங்களில் லஞ்சம் உட்பட பல குற்றவியல் வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில் உள்ளன.   அத்துடன் இந்த வழக்குகளுக்கு கீழ்க் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யப்பட்டு அதில் சில நாட்கள் கடந்து விடுகின்றன.    இதையொட்டி கீழ் கோர்ட்டுகளில் அளிக்கப் பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைகள் ஆறு மாதம் வரையே செல்லுபடி ஆகும்.   அதற்குப் பின் அந்த வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.    மீண்டும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கூடாது.    இந்த உத்தரவு எதிர்காலத்தில் விதிக்கப்படும் இடைக்கால தடைகளுக்கும் பொருந்தும்.

உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.    அதே வேளையில் பல லஞ்சக் குற்றங்களும்,  குற்றவியல் வழக்குகளும் வெகு நாட்கள் இந்த முறையிட்டால் நீட்டிக்கப்படக் கூடாது.   எனவே குற்றவியல் மற்றும் லஞ்ச வழக்குகளை முன்னுரிமை அளித்து விசாரணை செய்யப்பட்டு அவைகள் ஆறுமாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.” என கூறி உள்ளது.