ஸ்ரீஹரிகோட்டா:

கவல் தொடர்புக்கு பயன்படும் வகையில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ள ஜிசாட் 6-ஏ இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட் டவுன் நடைபெற்று வருகிறது.

தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோளை , ஜி.எஸ்.எல்.வி. எப்.8 ராக்கெட் வாயிலாக இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தகவல் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்,  அதிநவீன வசதிகளுடன்கூடிய ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து.

இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை  செலுத்தப்பட உள்ளது.

இதற்கான 27 மணிநேர  கவுண்டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் விண்ணில் பறக்கிறது.

இந்த செயற்கைக்கோளின்  ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்றும், 2,140 கிலோ எடைகொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, இஸ்ரோ அனுப்பும் 12-வது ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.