டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் புதிய பிராண்ட் அடையாளத்தை பெற்றுள்ளது.

‘தி விஸ்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய லோகோவை நேற்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் கூறுகையில், ”புதிய லோகோ தைரியமான பார்வை, வரம்பற்ற சாத்தியங்கள், முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இன்று நீங்கள் இங்கு காணும் புதிய லோகோ வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட அந்த தங்க ஜன்னலை பிரதிபலிக்கும்.

தங்க ஜன்னலின் முகப்பு வரம்பற்ற சாத்தியங்கள், முன்னேற்றம், நம்பிக்கை ஆகியவற்றை குறிக்கிறது” என்றார். 15 மாத தொடர் முயற்சிக்குப் பிறகு இந்த புதிய லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.

“வாய்ப்புகளின் ஜன்னலை” அடையாளப்படுத்தும் வகையில் இந்த புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் இந்த புதிய லோகோவை பயன்படுத்த உள்ளது.