டெல்லி: இந்தியாவின் சில மாநிலங்களிலும் சீனா உள்பட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 19-ந்தேதி (நாளை) மற்றும் 23-ந்தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா உள்பட சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  கடந்த ஜனவரியில் ஒமிக்ரான் பரவலின்போது,  இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வார கால தடை விதிக்கப்பட்டது. பின்ன சகஜக நிலைக்க திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, அதில் பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும். அதன்பின்னரே, அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து,  ஹாங்காங்கிற்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான சேவை தெரிவித்து உள்ளது.  வருகிற 19-ந்தேதி (நாளை) மற்றும் 23ந்தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.