சென்னை: இன்று பிற்பகல் 3மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களா தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை தீவு போல காட்சி அளிக்கிறது.
இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும், இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என்றும் உறுதிப்படுத்தி உள்ளது.