இந்தியாவில் முதன் முறையாக விமானத்தில் இந்தியாவில் முதன் முதலாக விமானத்தில் “கபாலி” படத்தின் விளம்பரம் வரையப்பட்டுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கபாலி’. தாணு தயாரித்திருக்கும் இந்தப்படம் தணிக்கை ஆக இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத் திரைப்படம் தற்போது ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படத்தின் தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பல்வேறு வகையில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். மேலும், பல்வேறு நிறுவனங்களும் தங்களது பொருட்களின் மூலமாக ‘கபாலி’யை விளம்பரப்படுத்த தாங்களாகவே அனுமதிக்கோரி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஏர் ஏசியா நிறுவனம் ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதற்காக தனியாக ‘கபாலி’ படத்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ஒரு விமானத்தை தயார் செய்திருக்கிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்து சென்னைக்கு ‘கபாலி’ படம் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவை தொடங்க இருக்கிறார்கள். தற்போது இந்த விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஹாலிவுட் படங்களே இதுவரை விமானத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்தன.
இந்தியாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel