3
‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அது  இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதன் மூலம் படத்தில் கமலின் புதிய கெட்அப் வெளியாகி இருக்கிறது.
மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து அப்பா கமல்ஹாசன் முதன்முறையாக நடிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
1
இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வந்தது.  படத்தின் இயக்குநர் ராஜீவ் குமாருக்கு திடீரென உடல்நிலை பாதிப்படையவே, கமலே படத்தை இயக்குகிறார்.
2
படத்தில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், முக்கிய வேடத்தில் பிரம்மானந்தமும் நடிக்கின்றனர். 2002 ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற  ‘பஞ்சதந்திரம்’ படத்துக்குப் பிறகு கமல்-ரம்யா கிருஷ்ணன் ஜோடி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
4
இந்த நிலையில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.  அதோடு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
இதுவரை ‘சபாஷ் நாயுடு’ படத்தின் எந்த ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிடாத நிலையில்,  ரசிகர்கள் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.