லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஓவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 100 தொகுதிகளில் களமிறங்கும் என அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்து உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.. 403 தொகுதிகளை உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் 2022ம் ஆண்டு நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் களத்தில் உள்ளன. இப்போதே அங்கு தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. பாஜக உள்பட அனைத்துக்கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில்,  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கsது . ஏ.ஐ.எம்.ஐ.எம்.  கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உ.பி.சட்டமன்ற  தேர்தல் தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை. 100 தொகுதிகளில் களமிறங்க திட்டமிட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

ஓவைசி கட்சி மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், தற்போது மாயாவதி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி தொடருமே என்பது கேள்விக்குறியாகி உள்ளது.