பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தனது சொந்த மண்ணான இந்தியாவில் வந்து சாக விரும்புவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

dawood

இந்திய உளவுத்துறை ஒருபக்கம் தாவூதுக்கு நாலாபுறமும் வலை விரித்து வைத்திருகிறது . இன்னொரு பக்கம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவரும் வேளையில், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஐக்கிய அரபு எமிரேட்சும் தாவூதின் பினாமிகளுக்கு கிடுக்கிப் பிடி போட தனது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட தாவூத் முற்றிலும் பலவீனமடைதிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு வரவும், இந்திய மண்ணில் சாக விரும்புவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் அதை தாவூதுடன் இணக்கம் காட்டி வந்த பாகிஸ்தானின் தீவிரவாத சக்திகளும் அந்நாட்டு அரசும் விரும்பவில்லை என்று தெரிகிறது. தாவூத் இந்தியா வரும் பட்சத்தில் அவரது அத்தனை இரகசியங்களும், அவருடன் சேர்ந்து சதித்திட்டங்களிலும் நாச வேலைகளிலும் ஈடுபட்ட அத்தனை பாகிஸ்தான் இயக்கங்களின் குட்டும் வெளிப்பட்டுவிடும் என்பதால் அவர்கள் தாவூத் இந்தியா வருவதை விரும்பவில்லை எனவும் பாகிஸ்தானை பொருத்தவரை இப்போது தாவூத் உயிருடன் இருபதைவிட சாவதே மேல் என்று கருதுவதாகவும் தெரியவருகிறது.
Courtesy: Rakesh K Singh, The New Indian Express