டில்லி

த்திய அரசு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி  போடுவதை எய்ம்ஸ் நிபுணர் சஞ்சய் ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடுவதால் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.   தற்போது இந்தியாவில் 18 வயதை தாண்டியோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது.

பல நாடுகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.   அவ்வகையில் இந்தியப் பிரதமர் மோடி வரும் ஜனவரி 3 முதல் 15 வயது முதல் 18 வயதானோருக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார். பல மாநிலங்களில் அந்த பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் எய்ம்ஸ் நிபுணர் சஞ்சய் ராய், “குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதால் கூடுதலாக எவ்வித பலனும் கிடைக்காது.  இவ்வாறு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு எடுத்த முடிவு அறிவியல் பூர்வமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.