ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்தியாவசிய பணிகளான மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளும் தங்கள் ஊழியர்களுக்கு பிற்பகல் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை வழங்கி உத்தரவிட்டது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ், ராம்மனோகர் லோகியா, லேடி ஹார்டிங்கே மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை ஆகிய நான்கு மத்திய அரசு மருத்துவமனைகளும் தங்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கியது.

இதனால் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் தடைபடுவதோடு பல்லாயிரக்கணக்கான புறநோயாளிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் நாளை அரைநாள் விடுமுறை என்ற தனது முந்தையை அறிவிப்பை விளக்கிக்கொண்டுள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை.

ராமர் கோயில் கொண்டாட்டம்… நோயாளிகள் திண்டாட்டம்… நாளை 1200க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்…