மிழகத்துக்குப் பதிய ஆளுநராக ஆர். என். ரவி நியமிக்கப் பட்டதில் இருந்தே ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன!

இங்கே சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசுக்கு ‘ ஒரு வித அரசியல் ஒவ்வாமை யை’ ஏற்படுத்த புதிய ஆளுநரை ஒன்றிய அரசு அனுப்பி இருப்பதாக பல வகைகளிலும் செய்திகளை சில ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன!

அதற்கு ஏற்ப, தமிழகத்தில் ‘ செல்லாக் காசை’ விடக் கேவலமாக மதிக்கப்படும் ஒன்றிய ஆளுங் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அடிக்கடி ஆளுநரைச் சந்திப்பதும்…

பின்னர் வெளியே வந்து, தமிழக அரசைப் பற்றிப் பல புகார்களை ஆளுநரிடம் தெரிவித்திருப்பது போன்ற பரபரப்புப் பேட்டிகள் தருவதும் மக்களால் ‘ காமெடி’ யாகப் பார்க்கப் படுகின்றன!

தற்போது,தன் மீது சுழலும் ‘கொடநாடு கொலை விவகாரம்’…மற்றும் தன் அமைச்சரவையில் இருந்த சகாக்களின் மீது ரெய்டுகள் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தமிழக ஆளுநரைச் சந்தித்து இருக்கிறார்!

இந்தச் சந்திப்புக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும்…. இந்தச் சந்திப்பே ஆளுநருக்குக் கொஞ்சம் தர்ம சங்கடத்தைத் தந்திருக்கக் கூடும்!

ஏற்கெனவே, ‘ ஒன்றிய அரசுடன் நிர்வாக ரீதியாக நெருக்கம்… அதே நேரத்தில், அந்த அரசின் ‘ மாநிலங்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்ப்பது என்று முதல்வர் ஸ்டாலின் ‘ வியூகம் வகுத்துத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!

இவற்றை ஆளுநரும் இதற்குள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்.
இச்சூழலில் தான், எடப்பாடியின் சந்திப்பு நிச்சயமாக அவருக்கு இனிப்பாக இருந்திருக்காது!

ஆனால் மக்களோ, ஆளுநரை இப்படி இவர்கள் ‘கேடயமா’கப் பயன்படுத்துவதைப் பார்த்து நகைத்துக
கொண்டிருக்கிறார்கள்!

–ஓவியர் இரா. பாரி.