சென்னை: எனக்கு பின்னாலும் அதிமுக இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர் செல்வம் டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு சென்ற ஓபிஎஸ், அங்கு அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.

இன்றைய சட்டபேரவை கூட்டத்தில் ஒபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 2 பேருடன் கலந்துகொண்டார். அதிமுகவின் உள்கட்சி மோதலை சபாநாயகர் கண்டுகொள்ளாத நிலையில், ஏற்கனவே இருந்தமாதிரி, அதிமுக துணை எதிர்க்கட்சி தலைவராகவே ஓபிஎஸ் நீடித்து வருகிறார். அவரது பெயர் சட்டமன்ற அலுவல் குழுவிலும் இடம்பெற்றுள்ளது. எடப்பாடி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில்  அதிமுகவுக்கு மொத்தமுள்ள 65 எம்எல்ஏக்களில் 61 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால்,  ஓபிஎஸ்க்கு அவருடன் சேர்ந்துமேலும் 2 பேர் மட்டுமே உள்ளனர். 3 பேர் குழுவின் தலைவராக உள்ள ஓபிஎஸ் எதிர்கட்சி துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் இன்று சட்டசபைக்கு வந்த நிலையில், அவருடன் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய எம்எல்ஏக்களும் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கண்டனர்.

அவை நடவடிக்கைகளுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “அதிமுக சார்பில் எங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக இன்றைய கூட்டத்தொடரில் நாங்கள் கலந்து கொண்டோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக பேரவை தலைவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு அலுவல ஆய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறோம்.

எம்ஜிஆர் தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை உருவாக்கி மூன்று முறை முதல்வராக நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். அவரது மறைவுக்கு பின்னால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாள ராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினையும் , தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார் . நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக முதல்வராக அவர் பணியாற்றினார். அதிமுகவுக்காக தொண்டர்கள் ரத்தம் சிந்த தொடங்கியது இந்த இயக்கம்.

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் சட்ட விதி அதனை ஜெயலலிதா கட்டிக் காத்தார். எந்த விதமான மாசும் படாமல் காக்கின்ற பணியில் தான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதை காட்டிக் அதை கட்டி காப்பாற்றுகின்ற சிப்பாய்களாக தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகப்பெரும் ஆதரவை தந்து கொண்டுள்ளனர். எம்ஜிஆரை பொறுத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம். ஆணிவேர் தற்போது கட்சியின் சட்ட விதிகள் மாற்றப்படுகின்ற சூழல் அபாயகரமானது. எனவே இந்த விதிகளின்படி அதிமுக இயக்கம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் “என்றார்.

பின்னர் ஓபிஎஸ்,  சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, நிகழ்ச்சியில் ஒருபகுதியாக ஓபிஎஸ் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். வெள்ளை புறாக்களை பறக்கவிட்டது.

பின்னர் இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஓபிஎஸ், எனக்கு பின்னாலும் அதிமுக இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என தெரிவித்துள்ளார்.