டெல்லி:

த்தியஅரசு இன்று தாக்கல் செய்துள்ள  தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீத கிருஷ்ணன் கூறி உள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, வெளிநாடுகளை சேர்ந்த சிறுபான்மையினத்தினரை மீண்டும் தங்களது நாட்டுக்கு அனுப்பும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு அதிமுக உள்பட பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  காங்கிராஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும்,  இந்த மசோதா, 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிரானது என குறிப்பிடும் வகையிலான எதுவும் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்காததால் தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், மந்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா மீது மக்களவையில், இன்றே ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.