தலைமை செயலகத்தில் கட்சி பணி: வெட்கக்கேடு! திமுக காட்டம்

Must read

சென்னை,

மிழக தலைமைச் செயலகத்தில் கட்சிப் பணிகளை விவாதிப்பதும், அது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்துவதும்  வெட்கக் கேடான செயல் என திமுக காட்டமாக கூறியுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து  தமிழகத்தில் 2வது முறையாக அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக தலைமைச் செயலகம், அக்கட்சியின் தலைமைக் கழகமாகவே மாற்றப்பட்டு விட்டது.

அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலமைச்சரும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய தலைமைச் செயலகம், அதிமுகவில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கு, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்கு உரியது என்றும்,

குடிநீர் பஞ்சம், மதுக்கடை பிரச்னை, விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பிரச்னைகளில் தமிழகம் சிக்கித் தவித்து வரும் நிலையில், இதுபற்றி அதிகாரிகளுடன், முதல்வரும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்தவில்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.

மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை  கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

More articles

Latest article