சென்னை,
முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று இரவு, செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், முன்னாள் மொடக்குறிச்சி எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளரும்ன ஆர்.என்.கிட்டுசாமி, “அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்த, சசிகலா திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், “தற்போதைய சூழ்நிலையில், அதிமுகவை காப்பாற்ற முதல்வர் பன்னீர்செல்வத்தால்தான் முடியும் என 95 எம்எல்ஏக்களுக்கு மேல் முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், நேற்று இரவு தூக்கிக் கொண்டிருந்த பல எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக போயஸ் கார்டனில் கொண்டு போய் அடைத்து வைத்துவிட்டார்கள்.
இன்று அவர்களை கட்சி அலுவலத்திற்குள் கொண்டு வந்து மிரட்டி கையெழுத்து வாங்குகிறார்கள்.
எம்எல்ஏக்களை பூட்டி வைத்துள்ளார்கள். ஆகவே, அவர்களை கவர்னர் தனித் தனியாக அழைத்து கருத்தைக் கேட்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.