சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைக்கிப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் தேர்தல் கமிசனுக்கு வந்தன. இதையடுத்து பல இடங்களில் ரெய்டு நடந்து பெரும் தொகை கைப்பற்றப்பட்டது.
இது போல ஏப்ரல் மாதம், கரூரில் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் இருந்து 4 கோடியே 70 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். , அவரது கிடங்கிலிருந்தும் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில் ஏற்கனவே அன்புநாதன் முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில் அன்புநாதன் வரிஏய்ப்பு செய்துள்ளதாக, மண்ணமங்கலம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அன்புநாதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.