hc_37
“வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்லLு.
இந்தியன் மக்கள் மன்றத் தலைவர் வாராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில்  இதுதொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளார். இவர் தனது மனுவில் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும்,  சாதி ஆணவக் கொலைகளை தடுக்க உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றுவதற்கு தமிழக அரசு, எதிர்க்கட்சி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு, எதிர்க்கட்சி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. . இதையடுத்து வழக்கு வரும் ஜூலை 27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.