சென்னை: அதிமுக பொதுக்குழுவில்  இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு முடிந்ததும், மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதைத்தொடர்ந்து,  ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசினர். இறுதியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினனர்.

பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தபின்னர், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர்.