சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,   கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் முதற்கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, அதிமுக தலைமை வெளியிட்டிருந்த  அறிவிப்பின்படி,  கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்  7ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 13ந்தேதி முதல் 23ந்தேதி வரை இரு கட்டங்களாக கிளைக்கழக தேர்தல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதற்கட்ட உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.  இதற்காக, அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை முன்னதாக அதிமுக தலைமை கழகத்தில் இருந்து பெற்றுச் சென்றனர்.மேலும்,மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய,பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்பட்டது.

முதற்கட்ட தேர்தல் (13.12.2021 & 14.12.2021:) நடைபெறும் பகுதி விவரம்:

கன்னியாகுமரி கிழக்கு,கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, சேலம் மாநகர்,சேலம் புறநகர், திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு,விருதுநகர் மேற்கு,மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு,நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை, பெரம்பலூர் ,அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மேற்கு,ஈரோடு புறநகர் கிழக்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு,கிருஷ்ணகிரி மேற்கு,

திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு.

2-வது கட்டத் தேர்தல் நடைபெறும் நாள்(22.12.2021 & 23.12.2021: ) மற்றும் பகுதிகள்:

தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மேற்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு, தருமபுரி,

சிவகங்கை, ராமநாதபுரம், தேனி,  திண்டுக்கல்  கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,

கள்ளக்குறிச்சி, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு,

வேலூர் மாநகர், திருப்பத்தூர், வேலூர் புறநகர்,  ராணிப்பேட்டை,

வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு).