ஆம்பூர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆம்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு கூடிய இஸ்லாமிய மக்களிடையே பேசும்போது, உலமாக்களின் சம்பளத்தை டபுளாக உயர்த்தியது அதிமுக அரசு என்று சுட்டிக்காட்டி பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி5வது கட்ட பிரசாரத்தைநேற்று வேலூரில் தொடங்கி உள்ளார். , வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று பிற்பகல் 4 மணி அளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தநேரியில் மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதியில் சென்றாயன் பள்ளியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்றதுன், மாலை 6.30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதையடுத்து, இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார் காலை, ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் புறவழிச்சாலையில் மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர், 10 மணி அளவில், அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி எதிரில் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, உலமாக்களின் சம்பளம் 1500 ஆக இருந்தைஅதிமுக அரசுதான் ரூ.3 ஆயிரமாக உயர்த்தியது என்றும், சிறுபான்மை மக்களுக்காக நோன்பு காலத்தில் சுமார் 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.