டில்லி,

திமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பதில் தவிறில்லை  உச்சநீதிமன்றம் அதிரடி தகவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிமுக சசிகலா அணியினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதையடுத்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது,பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  அதிமுக பொதுச் செயலராக சசிகலா நீடிப்பதற்கு தடை விதிக்கக்கோரி, தமிழகத்தை சேர்ந்த  ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசிகரன், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சசிகலா கட்சிபணியாற்ற தடையேதும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது முழுமையான தீர்ப்பு வெளியாகி உள்ளது.

அதில்,  அதிமுக பொதுச் செயலராக சசிகலா நீடிப்பதில் தவிறில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும்  பொதுச்செயலாளர் பதவி என்பது  அரசுப் பதவி அல்ல என்றும் அது ஒரு தனிப்பட்ட கட்சியின் பொறுப்பு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சசிகலா தரப்பினர் உற்சாகமடைந்து உள்ளனர்.