சென்னை:

விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும்  என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அதிமுகவில் இதுவரை கமுக்கமாக நடைபெற்று வந்த உள்கட்சி பூசல் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்ட இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், பூதா கரமாக வெடித்துள்ளது.

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்யன் படுதோல்வி அடைந்த நிலையில், அவரது தந்தையும், மதுரை வடக்கு மாவட்ட எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திறமையான தலைமை இல்லை என்றும், பொதுக்குழுவை கூட்டடி ஒரே தலைமை கொண்டு வர வேண்டும் என்றும்  ஒபிஎஸ், ஈபிஎஸ்-ஐ கடுமையாக சாடினார். இதையடுத்து பல அதிமுக தலைகளும் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிராக குரல்கொடுக்க தொடங்கி உள்ளன.

இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்ததால், அதிமுக பொதுக்குழு கூடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது  என்று கூறியவர், உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேசுவது சரியல்ல எனவும் கூறினார்.