சென்னை: கடந்த வாரம் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு  எதிராக  ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு  தாக்கல் செய்துள்ளார்.

ஜூன் 23ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. முன்னதாக, பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் கோரி வந்த நிலையில், ஒபிஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை யடுத்து 23ந்தேதி கூடிய பொதுக்குழுவில், அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்  என முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்மும்,  கே.பி.முனுசாமி ஆகியோர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இந்த நிலையில், தீஅதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவில், 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.