தூத்துக்குடி:

ணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற கனவில் இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது  என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். பணத்தை நம்பியே அவர்கள் தேர்தலை சந்திக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

தனது தொகுதியான தூத்துக்குடி வந்த திமுக எம்.பி. கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது தான் கருணாநிதியின் தாரக மந்திரம். அதை தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடைபிடித்து வருகிறார்.

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றவர்,  அதிமுக வினர் எப்போதும் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கக்கூடியவர்கள்   அதுபோலவே இந்த இடைத்தேர்தலிலும் பணத்தை மட்டுமே வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என கனவு காண்கின்றனர்… ஆனால், அது  நிச்சயம் நடக்காது. மக்கள் விழிப்போடு இருக்கின்றனர். இடைத்தேர்தலில் அவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கனிமொழியின் விமர்சனத்துக்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ,  கனிமொழி கூறியிருப்பது தவறு. அவர்கள் தான் அப்படி பழகியவர்கள். அவர்களது பழக்கத்தை எங்கள் மீது கூறுகிறார்கள். கடந்த மக்களவை தேர்தலில் யார் பணம் கொடுத்தார்கள் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தெரியும். பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாக கனிமொழியால் கூற முடியுமா?. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பெற்ற வெற்றி தான், கனிமொழியின் வெற்றி. அவர் மற்றவர்களை பற்றி கூறுவது பொருத்தமாக இருக்காது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெறும் என்றார்.