சென்னை:
நேற்று புதிய அமைப்பை உருவாக்கி உள்ள டிடிவி தினகரன் அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டும், ஜெயலலிதா படம் பொறித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், டிடிவியின் புதிய கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில், கட்சியின் இணை ஒருங்கி ணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிடிவியின் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில், டிடிவி கோரியிருந்த குக்கர் சின்னத்தையும், கட்சியையும் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று டிடிவி தினகரன் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது கருப்பு வெள்ளை சிவப்பு நிறத்திலான கொடி, அதனுள் ஜெயலலிதாவின் படத்துடன் அறிமுகப்படுத்தி இருந்தார்.
அதிமுக கட்சி கொடி போன்றே அமைந்துள்ள அந்த கொடியில், உள்ளே அண்ணா படத்திற்கு பதிலாக ஜெயலலிதா உருவப்படம் பொறிக்கப்பட்டது.
இந்த கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அதிமுக எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், டிடிவி அறிமுகப்படுத்தி உள்ள புதிய கொடி அதிமுக கொடி போல உள்ளதாகவும், ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ள டி.டி.வி.தினகரனின் கட்சி கொடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த மனு சிவில் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.