டில்லி:

மிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய  86 வழக்கறிஞர்களின் வேட்பு மனுவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.  வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குப்பதிவு மார்ச் 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் பலர் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள். அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்களது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் 86 வழக்கறிஞர்களின் வேட்பு மனுவை ரத்து செய்ய முடியாது என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இதனை தற்போது விசாரிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால்,  சென்னை உயர்நீதின்றத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும், அதை நீதிமன்றத்தில் கூறமுடியாது என்றும்  கூறினார்.