சென்னை: தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமாக கூட்டணி கட்சிகளான அதிமுகவும், பாஜகவுக்கும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில், முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து, இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை அதிகமாக்கியது.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் “அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்”. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்து உள்ளார்.