கோவை:

கோவையை சேர்ந்த ரகு லாரி மோதியதால் தான் இறந்தார் என்றும் அதிமுக பேனரால் விபத்து ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கோவை அவினாசி சாலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே பேனர்கள் வைப்பது, அலங்கார வளைவு அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடங்கின. கடந்த 24-ம் தேதி கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரகு அலங்கார வளைவில் மோதி ரகு என்ற பொறியாளர் இறந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரகுவின் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘‘அதிமுக பேனர் மீது மோதியதால் ரகு இறக்கவில்லை. அவர் மீது லாரி மோதியதால் தான் இறந்தார்’’ என்று தெரிவித்தார்.