சென்னை: ரஜினியுடன் அதிமுக கூட்டணி என்று கூறயிது, ஓபிஎஸ்-ன் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். அதிமுக கட்சியின் தலைவராக இருந்துவரும் ஓபி.எஸ்-ன் கருத்தை தனிப்பட்ட கருத்து என ஜெயக்குமார் கூறியிருப்பது, அதிமுகவில் புகைச்சல் நீடித்து வருவதை உறுதி செய்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 3ந்தேதி) செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு வெளியான சில நேரங்களில் அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்போது, தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே தப்புகுண்டு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ் , நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒபிஎஸ் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் பேசியது அவருடைய கருத்து என்று கூறி விட்டு சென்றார்.
அதிமுக தலைமையில் நீடித்து வந்த மோதல் காரணாக, பல மாதங்களாக அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக அதிமுக செயற்குழுவிலும், ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதலும் ஏற்பட்டதாக தகவல் பரவின. பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தி, முதல்வர் வேடபாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றதுடன், ஓபிஎஸ்-ன் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டனர். இதனால், இரு தலைவர்களும் சமாதானமாகி விட்டதாகவும், அதிமுக மீண்டும் வலிமை பெற்றுள்ளதாகவும் பேசி வருகின்றனர்.
ஆனால், தற்போது, ரஜினியின் கட்சி அறிவிப்பு தொடர்பான கருத்து மோதலில், அதிமுக தலைமையிடம் ஒற்றுமை இல்லை, தலைவர்களிடையே மோதல் போக்கு தொடர்கறிது என்பதை வெளிச்சம் போட்டுக்கொட்டியுள்ளது.
ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?