சென்னை: தமிழர்களின் அறுவடை திருநாளான  பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்,  சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். அதன்படி நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்காக கடந்த வாரம் முதலே பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகின்றனர்.

இதையொட்டி, தமிழ்நாடு அரசு ஒரு வாரம் சிறப்புபேருந்துகளை இயங்கி வருகிறது. அதாவது   ஜன.9ந்தேததி  முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஜன.11 நிலவரப்படி பொங்கலையொட்டி இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த இரு நாள்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பொங்கலுக்கு 22,797 பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

[youtube-feed feed=1]