சென்னை: தமிழ்நாடு சட்டசபைக்கு நாளை(ஏப்ரல் 6) அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில், கணக்கில் வராத, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
* கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு – ரூ.428.46 கோடிகள்
* கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு – ரூ.225.52 கோடிகள்
* மதுபான மதிப்பு – ரூ.4.61 கோடிகள்
* தங்கம், வெள்ளி & இதர முக்கிய உலோகப் பொருட்களின் மொத்த மதிப்பு – ரூ.176.11 கோடிகள்
* லேப்டாப், குக்கர், சேலைகள் உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு – ரூ.20.01 கோடிகள்