ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர்.
பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டம் இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் கச்சாரியாவாஸ்,
“அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டார்கள், மறுசீரமைப்பு என்று வரும்போது, அதற்குத் தேவையான செயல்முறை முடிந்து விட்டது, நாளை மதியம் 2 மணிக்கு பிசிசி கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்ஹ்டில் எங்களுக்கு மேலும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் தெரிவித்தார்.
மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களின் ஆதரவாளர்களுக்கு ஆட்சியில் இடமளிக்கக் கோரி பைலட் முகாம் கடந்த பல மாதங்களாக அமைச்சரவை மாற்றத்திற்கான கூச்சல் அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர, அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரஸுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களும் மறுசீரமைப்பில் தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.