ஆந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Must read

ஹைதராபாத்: 
ந்திராவில் மேம்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  சேதமடைந்த பெண்ணா ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.
கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சுங்கச் சாவடி வரை சுமார் 10 மணி நேரமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் காவல்துறை கவரப்பேட்டை வழியாக ஆந்திராவுக்குத் திருப்பிவிட்டுள்ளனர்.

More articles

Latest article