வேளாண் வங்கி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Must read

சென்னை,

மிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 28ந்தேதி தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

அந்த அரசாணையில் சிறுகுறு விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு விவசாய நிலங்கள் குறித்த வரையரையும் விதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகளின் கடன் தள்ளுபடியாகாமல் பாதிக்கப்பட்டனர்.

இது பாரபரட்சமான அறிவிப்பு என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சார்பாக அய்யாக்கண்ணு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது உயர்நீதி மன்றம் தொடக்க வேளாண்மை வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.

More articles

Latest article