ரஜினிக்கு என்ன தெரியும்?: விவசாய சங்கத் தலைவர் காட்டம்

Must read

பாண்டியன் - ரஜினி
பாண்டியன் – ரஜினி

காவிரியில் தமிழக உரியமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வருபவர்களில் ஒருவர், தமிழக அனைத்து விவாசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
தஞ்சை டெல்டா பகுதியில் நிறைவேற்ற இருந்த மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றதில் இவரது போராட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இவரிடம், “500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்திருப்பதை நடிகர் ரஜினி காந்த் வரவேற்றுள்ளாரே” என்று கேட்டபோது, பி.ஆர். பாண்டியன் தெரிவித்த பதில்:
“மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் குறிப்பாக விவசாகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் நடிகர் ரஜினிக்கு இது தெரியுமா.. அவருக்கு என்ன தெரியும்.. சினிமா பற்றி தெரியும்… அவ்வளவுதான். அவர்  வெளியிடும் கருத்துகளை எல்லாம் ஏன் பெரிய விசயமாக ஆக்குகிறீர்கள்” என்றார்.
சரியான கேள்விதான்!

More articles

Latest article