ஆக்ராவில் பாஜக தலைவரின் பண்ணைவீட்டில் நடந்த பாலியல் தொழில்?

Must read

ஆக்ரா: 
க்ரா மாநில  பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் நடந்து வந்த பாலியில் தொழிலை போலீசார்  கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் பாஜக தலைவர் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது  தெளிவாக தெரியவில்லை என்ற போதும். அவர் வீட்டில் நடந்துள்ளதால். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு  பின்னரே பாஜக தலைவர் குற்றமற்றவாரா என்பது தெரிய வரும்.
இதுகுறித்து வெளியான செய்தியில், பாஜக தலைவரின் வீட்டை சிலருக்கு லீசுக்கு விட்டுள்ளாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது. ஏன்னென்றால் பாலியல் தொழிலில் ஈடுபடும்  சச்சின், விஷ்ணு மற்றும் விஷால் கோயல் ஆகியோயர் பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஆக்ரா காவல்துறை உயரதிகாரி பாப்லு குமார், மாநில  பாஜக தலைவரின்  பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தியது, மாநில முழுவதும்  பாலியல் தொழில் செய்ய்பவர்களை  பிடிக்க போலீசார் மேற்கொண்ட ரெய்டின் ஒரு பகுதியாகும் என்றார். அந்த பண்ணை வீட்டில் நடந்தது குறித்து பேசிய அவர், பண்ணை வீட்டில் இருந்து பிடிக்கப்பட்ட பெண்கள், அங்கிருந்து வாடிக்கையாளர்களை காண பல்வேறு ஹோட்டல்களுக்கு செல்ல திட்டமிருன்தனர் என்றார்.

இந்த சம்பவத்தில் சில பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதுடன், கைதான மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர், தன் மீது வேண்டுமென்றே போலீசார் குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article