மே 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடக்கம்… கொரோனா ஒழியுமா….

Must read

சென்னை:

ண்டுதோறும் மக்களை சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே மாதம் 4ந்தேதி தொடங்குகிறது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவும் எரிந்து ஒழியுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

சித்திரை மாதம் 21-ம் தேதி  (மே 4ந்தேதி) முதல் வைகாசி மாதம் 14-ம் தேதி (மே 28 ஆம் தேதி )வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படு கிறது. சித்திரை மாதம், பரணி 3-ஆம் பாதத்தில்  சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

அதன்படி இந்த ஆண்டு  அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி முதல் தொடங்கிறது. இந்த 24 நாட்களும் தமிழகத்தில் வெயில் மண்டையைப் பிளக்கும் வகையில் இருக்கும்.  தற்போதே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கோடை மழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

பொதுவாகவே கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் வெப்பம் காரணமாக குறையும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதிக அளவிலான வெப்பத்தில் கொரோனா வைரஸ் உயிர் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் கொளுத்தும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது.

இந்த  வெப்பத்தின் தாக்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து, தமிழக மக்களை காப்பாற்றும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More articles

Latest article